தற்போது சன் பிக்சர் வெளியீட்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாப்பிள்ளை. இந்த வருடம் சிங்கம் புலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு பெரிய மொக்க படம் இந்த மாப்பிள்ளை. படம் எதற்காக எடுத்தார்கள், எதற்காக முடித்தார்கள் என இயக்குனருக்கும் தெரியவில்லை,படம் பார்த்த மக்களுக்கும் தெரியவில்லை.
இப்படத்தை பொறுத்தவரை தனுஷ் எடுபடவில்லை. குறிப்பாக கதையின் நாயகி ஹன்ஷிகா ஒரு பொம்மை போல் வந்து போகிறார். அவருக்கும் சொல்லும்படியான வசனம்,கதாப்பாத்திரம் இல்லை.அவருக்கு தனது பெரிய வயிறை மறைக்கவே நேரம் சரியாக இருக்கிறது. மேலும் அவருக்கு கதையின் தொடக்கத்திலும், முடிவிலும் மட்டுமே பேசுகிறார். அவரை இயக்குனர் பாடல்களுக்கும் மட்டும் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
தனுசை பற்றி சொல்லனும்னா எடுபடாத நாயகன். இப்படத்தில் அவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தேவையற்ற சண்டை காட்சி,FLASH BACK. எடுபடாத பஞ்ச் டயலாக். விறுவிறுப்பற்ற திரைக்கதை.
இப்படத்திற்கு முக்கிய பலம் நடிகர் விவேக். அவர் இல்லையென்றால் இப்படம் பார்க்க சகிக்காத படம். அவர் மட்டுமே இப்படத்தை நகர்த்தி செல்கிறார். மேலும் மனோபாலாவின் சாமியார் கதாபாத்திரம் சூப்பர்.
மனிஷா கொய்ராலாவின் நடிப்பு எதோ சுமார். அவருக்கு அத்தை பாத்திரம் எடுபடவில்லை.
படத்தின் பலம்:
1 . விவேக்கின் காமெடி.
2 . மனோபாலாவின் காமெடி.
படத்தின் பலவீனம் :
1 . தேவையற்ற அதிக கதாபத்திரங்கள்.
2 . நாயகின் அப்பா எங்கே?
3 . எடுபடாத பாடல்கள் .
4 . எடுபடாத தங்கை செண்டிமெண்ட்.
5 . சம்பந்தம் இல்லா படத்தின் முடிவு.
WHY BLOOD, SAME BLOOD


















