இது சாதாரண நட்பின் கதை போன்று தான் உங்களுக்கு தெரியும் . ஆனால் இது அது கிடையாது.
எங்கோ பிறந்து ,வளர்ந்த மூவர்களின் கல்லூரியின் வாழ்க்கை ,மற்றும் நிகழ் வாழ்க்கையின் சம்பவம்.
இப்படத்தில் ஆமிர் கான் நடித்த பாத்திரத்தில் விஜய்,
மாதவன் நடித்த பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் ,
சர்மான் ஜோஷி நடித்த பாத்திரத்தில் ஜீவா.நடிக்கின்றனர் .
கல்லூரி முதல்வராக நமது நக்கல் நாயகன் சத்யராஜ் நடிக்கின்றனர்.
மேலும் S.J.சூர்யா ,லாரன்ஸ் நடிக்கின்றனர்.
இப்படத்தில் இசை அமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளார் .இப்படத்தின் இயக்குனர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள்.
இப்படத்தின் கதை தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு பொழுது போக்கு என அனைவராலும் பாராட்டப்பட்ட படம். இதில் அன்பு ,காதல், அதிக நட்பு , அந்த நட்புக்குள் அதிக பாசம்,சோகம்,பிரிவு,சந்தோசம், முக்கியமா கல்லூரி கலாட்டா அனைத்தும் உண்டு.
ஆரம்பத்தில் மாதவனும்,சர்மான் ஜோஷி இருவரும் ஆமிரை தேடி செல்வதாய் கதை தொடர்கிறது . அப்புறம் கல்லூரியில் சீனியர் சிறுநீரில் ஷாக் வைப்பதில் மூவரின் நட்பு சேர்கிறது.
எப்போதும் கடேசி பெஞ்சில் உட்கார்ந்து ஆசிரியரிடம் திட்டு வாங்குவது .ஒரு முறை சரக்கு அடித்து விட்டு இரவு ஆசிரியரிடம் ரகளை செய்து மாட்டிக்கொண்டு சமாளிக்க தெரியாமல் போதையில் உளரும்போது சிரிப்பின் உச்சம் .அதனால் கல்லூரியை விட்டு நீக்கும் போது தற்கொலை செய்து கொள்ளும் ஜோஷியின் நடிப்புக்கு சல்யுட்.
அதே போல் மாதவனின் நடிப்பு குறைவில்லாமல் இருந்தது.அதே போல்
கரீனா கபூரின் நடிப்பும் சூப்பர்.
நாயகன் ஆமிர் சொல்லவா வேண்டும். நகைச்சுவை, காதல், நட்பு, அனைத்திலும் ஒரு கை பார்த்திருக்கிறார்.
இறுதியில் கரினாவின் அக்காவிற்கு பிரசவம் பார்க்கும் இந்த 3idiots
அதற்க்கு பின்னர் எதனால் ?பிரிந்தனர் . அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்று சொல்லி இருப்பது அருமை.அதே போல் கரினா,ஆமிர் காதல் எப்படி சேர்ந்தது
என்பதும் சூப்பரோ சூப்பர்.
தமிழ் ரசிகர்களே உங்களுக்கு அருமையான முத்த காட்சி காத்திட்டு இருக்குது.
இதே போல் தமிழ் ரீமேக் நண்பன் வெற்றி பெற வாழ்த்துவோம் .