Saturday, 9 April 2011

சன் பிக்சரின் கைப்பிள்ளை

      தற்போது சன் பிக்சர் வெளியீட்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாப்பிள்ளை. இந்த வருடம் சிங்கம் புலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு பெரிய மொக்க படம் இந்த மாப்பிள்ளை. படம் எதற்காக எடுத்தார்கள், எதற்காக முடித்தார்கள் என இயக்குனருக்கும் தெரியவில்லை,படம் பார்த்த மக்களுக்கும் தெரியவில்லை.
         இப்படத்தை பொறுத்தவரை தனுஷ் எடுபடவில்லை. குறிப்பாக கதையின் நாயகி ஹன்ஷிகா ஒரு பொம்மை போல் வந்து போகிறார். அவருக்கும் சொல்லும்படியான வசனம்,கதாப்பாத்திரம் இல்லை.அவருக்கு தனது பெரிய வயிறை மறைக்கவே நேரம் சரியாக இருக்கிறது. மேலும் அவருக்கு கதையின் தொடக்கத்திலும், முடிவிலும் மட்டுமே பேசுகிறார். அவரை இயக்குனர் பாடல்களுக்கும் மட்டும் பயன்படுத்தி கொண்டுள்ளார்.    
         

              தனுசை பற்றி சொல்லனும்னா எடுபடாத நாயகன். இப்படத்தில் அவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தேவையற்ற சண்டை காட்சி,FLASH BACK. எடுபடாத பஞ்ச் டயலாக். விறுவிறுப்பற்ற திரைக்கதை.
       
            இப்படத்திற்கு முக்கிய பலம் நடிகர் விவேக். அவர் இல்லையென்றால் இப்படம் பார்க்க சகிக்காத படம். அவர் மட்டுமே இப்படத்தை நகர்த்தி செல்கிறார். மேலும் மனோபாலாவின் சாமியார் கதாபாத்திரம்  சூப்பர்.
  

         மனிஷா கொய்ராலாவின் நடிப்பு எதோ சுமார். அவருக்கு அத்தை பாத்திரம் எடுபடவில்லை.

படத்தின் பலம்:
1 . விவேக்கின் காமெடி.
2 . மனோபாலாவின் காமெடி.

 படத்தின் பலவீனம் :
1 . தேவையற்ற அதிக கதாபத்திரங்கள்.
2 . நாயகின் அப்பா எங்கே?
3 . எடுபடாத பாடல்கள் .
4 . எடுபடாத தங்கை செண்டிமெண்ட்.
5 . சம்பந்தம் இல்லா படத்தின் முடிவு.

        
                                        WHY BLOOD, SAME BLOOD

Thursday, 24 March 2011

பாலிவுட்டில் எந்திரன்

தமிழில் ரஜினி நடித்து மெகா ஹிட் திரைப்படம் எந்திரன். தமிழில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல் உணர்வை கொடுத்தவர் ஷங்கர்.
    அதே போல் தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய ROBO வர இருக்கிறது.
   இப்படத்திற்கு RA-One என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

             அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கிறார். மேலும் அப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.
              இப்படத்தின் பட்ஜெட் 600 கோடி. இப்படம் ஹாலிவுட்டிற்கு இணையாக திரைக்கதையுடன் தயாராகி வருகிறது.
              இப்படத்தில்  ஹாலிவுட் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகின்றனர்.
    இப்படத்தில் ஷாருக் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இவர்கள் DON படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.
           இப்படத்தின்  ட்ரைலர் இத்துடன் இணைத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.

Thursday, 17 March 2011

பில்லா போல் ஒருவன்

  என்னடா பில்லா போல் ஒருவன் என எழுதியிர்க்கேன்னு பாக்கிரிங்களா.
    ஆமாங்க நம்ம தல அஜீத் நடிக்க போகும் பில்லா 2  படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார் .

                            
                     இவர் கமல் நடித்து வெற்றி பெற்ற உன்னை போல் ஒருவன் படத்தின் இயக்குனர் சாக்ரி டோலேட்டி .இவர்தான் தற்போது பில்லா 2 படத்தின் இயக்குனர். பில்லாவின் முதல் பகுதியை இயக்கிய விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகி கொண்டார்.

                        இப்படத்தில் டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பது கதை.
   அதாவது பில்லாவின் முந்தைய வாழ்க்கை பற்றி வெளி வரும் கதை.



           இப்படத்தில் நயன்தார நடித்த ரோலில் தெலுங்கு கவர்ச்சி புயல், தமிழகத்தின் no:1 ஹீரோயின் அனுஷ்கா நடிக்கிறார்.

     மேலும் இப்படத்தின் இசைஅமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா.





       ஏற்கனவே தலயின் மங்காத்தா மே 1  வெளிவர இருக்கிறது . அடுத்த கட்ட வேலையாக பில்லா 2 துவங்க இருக்கிறார் தல.
      இந்த வருடம் தல ரசிகர்களுக்கு ரெட்டை தல தீபாவளி உண்டு.

Tuesday, 8 March 2011

தமிழில் வருகிறது சல்மானின் தபாங்.

.     

       ஹிந்தியில் வசூலில் சாதனை படைத்த படம்  தபாங். இதில் நடிகர் சல்மான்கான் நடித்திருந்தார்.இப்படத்தின்  வெற்றி  அவர் நான்கு தோல்வி படங்கள் கொடுத்தாலும் அசைக்க முடியாத  வெற்றி.இவர் ஏற்கனவே தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தை  ஹிந்தி ரீமேக்  வான்டட்(WANTED) என்ற படம்  மூலம் இழந்த மார்கேட்டை பிடித்தார்.அதுவும் வசூலில் சாதனை படைத்த படம் தான்.

      இப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் சிம்பு நடிக்கிறார். 
           மேலும் இப்படத்தின் கதாநாயகியை தான் தேர்ந்தெடுப்பேன் என்று இயக்குனரிடம் கூறியுள்ளார்.

  இவர் தேர்தேடுதிருக்கும் நாயகி தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகி சோனம் கபூர் . 
        இவர் ஏற்கனவே இயற்கை ஹிந்தி ரீமேக் பதிப்பில் நடித்தவர்.
      
                               சிம்புவின் ஆசை நிறைவேறுமா.

Monday, 7 March 2011

சூர்யாவின் ஐந்து வேடங்கள்

        தற்போது சூர்யா நடித்து கொண்டிருக்கும் மாற்றான் படத்தில் ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
      
         மேலும் முக்கிய கேரக்டரில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நடிக்கிறார்.
     

Friday, 4 March 2011

நண்பனின் கதை (3 idiots)

 
    இது சாதாரண நட்பின் கதை போன்று தான் உங்களுக்கு தெரியும் . ஆனால் இது அது கிடையாது.

எங்கோ பிறந்து ,வளர்ந்த    மூவர்களின் கல்லூரியின் வாழ்க்கை ,மற்றும்  நிகழ் வாழ்க்கையின் சம்பவம்.
     இப்படத்தில் ஆமிர் கான் நடித்த பாத்திரத்தில் விஜய்,
     மாதவன்  நடித்த பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் ,
     சர்மான் ஜோஷி நடித்த பாத்திரத்தில் ஜீவா.நடிக்கின்றனர் .
     கல்லூரி முதல்வராக  நமது நக்கல் நாயகன் சத்யராஜ் நடிக்கின்றனர்.
 மேலும் S.J.சூர்யா ,லாரன்ஸ் நடிக்கின்றனர்.
         

இப்படத்தில் இசை அமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளார் .இப்படத்தின் இயக்குனர்  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள்.

                 இப்படத்தின் கதை தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு பொழுது போக்கு என அனைவராலும் பாராட்டப்பட்ட படம். இதில் அன்பு ,காதல், அதிக நட்பு , அந்த நட்புக்குள் அதிக பாசம்,சோகம்,பிரிவு,சந்தோசம், முக்கியமா கல்லூரி கலாட்டா அனைத்தும் உண்டு.

            ஆரம்பத்தில் மாதவனும்,சர்மான் ஜோஷி இருவரும் ஆமிரை தேடி செல்வதாய் கதை தொடர்கிறது . அப்புறம் கல்லூரியில் சீனியர் சிறுநீரில் ஷாக்  வைப்பதில் மூவரின் நட்பு சேர்கிறது.
             எப்போதும் கடேசி பெஞ்சில் உட்கார்ந்து ஆசிரியரிடம் திட்டு வாங்குவது .ஒரு முறை சரக்கு அடித்து விட்டு இரவு ஆசிரியரிடம் ரகளை செய்து மாட்டிக்கொண்டு சமாளிக்க தெரியாமல் போதையில் உளரும்போது சிரிப்பின் உச்சம் .அதனால் கல்லூரியை விட்டு நீக்கும்  போது தற்கொலை செய்து கொள்ளும் ஜோஷியின் நடிப்புக்கு சல்யுட்.
                 
             அதே போல் மாதவனின் நடிப்பு குறைவில்லாமல் இருந்தது.அதே போல்
கரீனா கபூரின் நடிப்பும் சூப்பர்.
                

                 நாயகன் ஆமிர் சொல்லவா வேண்டும். நகைச்சுவை, காதல், நட்பு, அனைத்திலும் ஒரு கை பார்த்திருக்கிறார்.
                    இறுதியில் கரினாவின் அக்காவிற்கு பிரசவம் பார்க்கும் இந்த 3idiots
 அதற்க்கு பின்னர் எதனால் ?பிரிந்தனர் . அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்று சொல்லி இருப்பது அருமை.அதே போல்  கரினா,ஆமிர் காதல் எப்படி சேர்ந்தது 
என்பதும் சூப்பரோ சூப்பர்.
                தமிழ் ரசிகர்களே உங்களுக்கு அருமையான முத்த காட்சி காத்திட்டு இருக்குது.

          

 இதே போல் தமிழ் ரீமேக் நண்பன் வெற்றி பெற வாழ்த்துவோம் .